வெடிச் சம்பவமொன்றில் சிறுவன் பலி - இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் 01-10-2009 மாலை 5.00 மணியளவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது கண்டெடுத்த பொருள் ஒன்றை கல்லில் குத்தி அதனை உடைக்க முற்பட்டபோது அப் பொருள் வெடித்ததில் ஸ்ரீவரதன் லதிகரன்(11) என்ற சிறுவன் அவ்விடத்திலேயே மரணமானார். ஜெகதீஸ்வரன் சாலினி (8), ஜெகதீஸ்வரன் அகிலன் (7) ஆகிய இரு சிறுவர்களும் படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அச்செழு குடியேற்றத்திட்டத்தைச் சேர்ந்தவர்களே இச் சம்பவத்தில் இலக்கானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment