லிபியாவின் சுதந்திர தினத்தில் ஜனாதிபதிலிபியாவின் தலைநகர் திரிபோலியில் நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்ற லிபியாவின் 40 ஆவது சுதந்திரதின வைபவ நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏனைய 40 நாடுகளிலிருந்த வருகை தந்திருந்த தலைவர்களுடன் இந்த நிகழ்வுகளைப் பார்வையிட்டார். லிபியப் புரட்சி மூலம் கேணல் முஅம்மர் கடாபியால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தியை பறைசாற்றும் நிகழ்வாக இந்த சுதந்திரக் கொண்டாட்டம் அமைந்திருந்தது. சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து தனித்தனியாக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயா மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று மாலை வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவஸ{டன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment