29 January 2010

வெகு விரைவில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்

எதிர்வரும் சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டின் யுக புருஷர் மற்றும் மனிதாபிமானமிக்க தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ளார். கடந்த ஐந்து ஜனாதிபதி தேர்தல்களை விடவும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தது. அதாவது நாட்டு மக்கள் நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். இரண்டு விடயங்களின் அடிப்படையில் நாம் இந்த தேர்தலை பார்க்கவேண்டும்.

அதாவது முதலாவது விடயமாக கடந்த நான்கு வருடங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டார். அதேவேளை நாட்டை பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்கொண்டு சென்றார். அதற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். இரண்டாவது விடயமாக இந்த நாட்டை யாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது தொடர்பில் நாட்டு மக்கள் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை மக்கள் வைத்துள்ளனர். இது குறித்து கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் அரசியலமைப்பின்படி ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் காலப்பகுதி முடிகின்றது. அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரவு செலவுத்திட்டம சமர்ப்பிக்கப்படவேண்டும். காரணம் கணக்கு வாக்கெடுப்பு அன்றுடன் நிறைவு பெறுகின்றது. எனவே சில வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்

No comments:

Post a Comment