
நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி
- ஜனாதிபதி
நாட்டு மக்களின் நன்றி மனப்பான்மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டு மொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனவும், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் என்றார். மேலும் அச் செய்தியில் இத்தேர்தலை நீதியும் சுதந்திரமானதாகவும் நடத்த முடிந்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இதனால் இத் தேர்தல் முடிவை எவரும் மாசுபடுத்த முடியாது. தற்போது நாம் வெற்றியடைந்தாயிற்று. இவ்வெற்றியினூடாக நாட்டு மக்கள் தமது நன்றி மனப்பான்மையை உலகுக்குக் காட்டியுள்ளனர்.
தோல்வியில்லாத இடத்திலிருந்தே உண்மையான வெற்றி உருவாகிறது. இதனடிப்படையில், இவ்வெற்றி நம் அனைவரினதும் வெற்றியாகும். இதனை அமைதியாகக் கொண்டாடுமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் சகலருக்கும் சமமானது. சட்டம் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கின்ற அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடொன்றை நாம் எதிர்கால சந்ததிக்காக உருவாக்குவோம். அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்தார்களோ அதனை நான் இனங்கண்டுள்ளேன்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் செயலக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த ஜயாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தோர், சகல ஊடக நிறுவனங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்
No comments:
Post a Comment