30 January 2010

ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்க மக்கள் -ஐரோப்பிய ஒன்றியம்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தொகையான மக்கள் வாக்களித்துள்ளமை குறித்து பெருமிதமடைவதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மக்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக கலந்து கொள்ள பேரார்வம் கொண்டுள்ளார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் துணைத் தலைவியுமான பெரோனஸ் கதறீன் அஷ்ரன்

பல வருடங்களின் பின்னர் இத்தகையதோர் தேர்தல் முதல் தடவையாக பாரதூரமான அசம்பாவிதங்களின்றி நடந்தேறியதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது.

பெரும் தொகையான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை அவர்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பாராட்டுத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் சகல மக்களுக்கும் நிலையான சமாதானத்தை கொண்டுவருவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கும் அவர் எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment