கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவர் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருவர் குருசோ வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் மூவர் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துநர் ஒருவரும் ஆகும். இவர்களிடம் முறையே 70 லட்சமும் 40 லட்சமும் கப்பமாக கோரப்பட்டுள்ளது.
யாழ்.குருசோ வீதியிலுள்ள வீடொன்றில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து மீட்ட பொலிஸார், 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, இருவர் தப்பியோடியுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment