வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 4000 குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு நிறைவடைந்து விட்டதாகவும், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கட்டளைத் தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், மீள்குடியேற்றம் செய்வதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர் பெரும்பாலும் மீள்குடியேற்றம் நிறைவுறும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment