இந்திய-இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவரும் இலங்கையில் இனக்குழுக்களுக்கிடையே சமத்துவம் மற்றும் பங்களிப்பை வழங்கும் விடயங்கள் பற்றி ஆராய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் நலன்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதோடு புனர்வாழ்வு நடவடிக்கைகள் கௌரவமாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது பற்றியும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சார்க் மாநாட்டிற்கு அப்பால் இந்திய பிரதமர் -இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஆழமாக ஆராய்வதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment