30 April 2010

மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்

இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி தெரிவிக்கின்றது. இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை பூடான் தலைநகர் திம்புவில இடம்பெற்றுள்ளது.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமரிடம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment