விமான நிலையம், கே. கே. எஸ் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவி
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு இந்தியா முன் வந்துள்ளது. பிரதமர் டி. எம். ஜயரட்னவுடன் இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் நேற்று நல்லெண்ண சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்பின்போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இதற்கான இணக்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ஜயரட்ன பிரதமரான பின்னர் அவரைச் சந்தித்த முதலாவது இராஜதந்திரி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராவார். இந்த நல்லெண்ண சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாட ப்பட்டுள்ளது. அத்தோடு, ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
“வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகர் மெச்சியதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குவதுடன் குறிப்பாக பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment