02 September 2009

இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 10,000 பேர்; காணாமல் போயுள்ளனர்- அவர்களுக்கு நடந்ததென்ன?

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தற்காலிகமாக தங்க வைத்துள்ள வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்த சுமார் 10,000 பொதுமக்கள் அங்கிருந்து காணாமல் போயுள்ளனர் என்று வவுனியா மாவட்ட அதிபரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தொகைப் பொதுமக்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளமுள்ளி வாய்க்கால் மற்றும் நந்திக்கடல் களப்பு போன்ற பிரதேசங்களில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தங்கியிருந்த பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு பாதுகாப்புப் படையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையின் பிரகாரம் சுமார் மூன்று இலட்சம் பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கணக்கிடப்பட்ட போது அத்தொகை மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 80,000 மாகக் காணப்பட்டது.

முழுமை http://www.theneeweb.de/html/020909-1.html

No comments:

Post a Comment