26 October 2009

1,95,000 பேர் குடியமர்த்தப்பட உள்ளனர்-சமரசிங்க

வவுனியா நலன்புரி முகாம்களில் தற்போது 1,95,000 பேர் மாத்திரமே தங்கியுள்ளதாகவும் ஏனைய அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைதற்கு முன்னர் பெரும்பாலான மக்களை மீள்குடியேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடனேயே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதற்கான நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் 2,80,000 இற்கு மேற்பட்ட மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர்.

மேலும் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்றுவிக்கப்பட்டுள்ள ஆயிரம் இராணுவ அதிகாரிகள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்ணிவெடி அகற்றும் 14 இயந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக 10 இயந்திரங்கள் இன்னும் சில தினங்களில் இலங்கையை வந்தடையும். அதன்போது கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் வெகுவாக துரிதமடையும் என்றார்.

No comments:

Post a Comment