31 October 2009

78 இலங்கை அகதிகளை அழைத்துச் செல்ல ஒருவாரம் காலக்கெடு

இந்தோனேசிய கடற்பரப்பில் 78 இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலை கப்பலை அங்கிருந்து செல்வதற்கு இந்தோனேசிய அரசு ஒருவார காலம் அவகாசம் வழங்கியுள்ளதாக அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கப்பலில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதெனவும் அவர்கள் விசாரணைக்காக இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.
இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய கப்பலை நவம்பர் மாதம் 6ஆம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என்றார்

No comments:

Post a Comment