31 October 2009

வாறான் வாறான் ப+ச்சாண்டி மாட்டு வண்டியிலே……..-சதா. ஜீ-

ஈழவிடுதலைப் போராட்டம் இளைய தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டபோது இளைஞர்களும் யுவதிகளும் அர்ப்பணிப்போடு இயக்கத்தை கட்டியமைப்பதிலும் மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் அயராது பாடுபட்டார்கள். அவர்கள் அளவிடமுடியாத தியாகங்களை செய்தார்கள். மூன்ற வேளை சாப்பிட முடியாத நிலையிலும் தாம் கொண்ட இலட்சியத்துக்காக வீறுடன் எழுந்தனர். அவர்கள் மட்டுமல்ல சாதாரண பொது மக்கள் பலரும் இவர்களின் தியாகத்தை மதித்து தோளோடு தோள் நின்றார்கள்.

இலங்கை இராணுவத்தின் பிடியில் பல இளைஞர்கள் யுவதிகள் அகப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்தார்கள். தமது இனிமையான இளைமைக் காலத்தை சிறைக் கம்பிக்குப் பின்னால் எண்ணிக்கொண்டிருந்தார்கள். பலர் தமது உயிர்களையே தியாகம் செய்தார்கள்.ஆனால் ஒரு சிலர் இந்த காலகட்டத்தில் ‘பராக்குக்காட்டி’ (divert) தம்மைப் பாதுகாத்துக்கொண்டதுடன் வளமாகவும் நலமாகவும் வளர்ந்துகொண்டார்கள். இவர்கள் இன்று தமிழ் ஜனரஞ்சக அரசியல் பிரமுகார்கள். இவர்கள் மாக்சியம் லெனினிசம் கற்று மக்களை விடுதலையின்பால் ஈர்க்க முற்பட்டவர்களாம்!
மேலும் http://www.sooddram.com/Articles/Sathasivam/Oct302009.htm

No comments:

Post a Comment