25 October 2009

கரன்ஸி ‘புலி’யின் மர்ம முகங்கள் : பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்

நியூயோர்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயோர்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் பண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ (FBI) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயோர்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப் புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி” ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்” அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.
முழுமை http://www.thenee.com/html/251009-5.html

No comments:

Post a Comment