28 October 2009

பயங்கரவாதத்தை எதிர்க்க சீனா, ரஷ்யா, இந்தியா தீர்மானம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், இந்த பிராந்தியத்தில் ஒரு ஸ்திரத்தன்மை உருவாக்கவும், இந்தியா, சீனா மற்றும்

ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என, தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி ஆகிய மூன்று நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த முத்தரப்பு கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது.அதற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என, தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் சுகாதாரம், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலையின் பாதிப்பை குறைத்தல் போன்ற விஷயங்களில் மூன்று நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, அதற்கு உத்வேகம் கொடுப்பது என, முடிவு செய்யப்பட்டது

முழுமை http://www.thenee.com/html/281009-3.html

No comments:

Post a Comment