28 October 2009

இந்தியா நிதி -கொழும்பு- மாத்தறை ரயில் பாதை

கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சு இந்திய அரசாங்கத்தின் கடனுதவின் கீழ் இந்த ரயில் பாதை அபிவிருத்தி பணிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.மணிக்கு 100 கிலோ மீற்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு ரயில் பாதை அபிவிருத்தி மூலம் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 2.00 மணி நேரத்தில் செல்ல முடியும்.

பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற் கட்டம் மாத்தறையிலிருந்து காலி வரை இடம்பெறவுள்ளதோடு இரண்டாம் கட்டம் காலியிலிருந்து களுத்துறை வரையும், மூன்றாம் கட்டம் களுத்துறையிலிருந்து கொழும்பு வரையும் இடம்பெறவுள்ளது. இவ் அபிவிருத்திப் பணிகள் 2010 இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment