26 October 2009

கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதப்படுத்த இந்திய குழு

வன்னியில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த தமிழக பாராளுமன்ற குழுவினர் கடந்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து பேசியபோது கண்ணிவெடி அகற்றும் துரித நடவடிக்கை பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறி அறிக்கைகளும் சமர்ப்பித்தனர்.
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்ற அங்கு நிலக் கண்ணிவெடிகள் தடையாக இருப்பதையடுத்து அவற்றை துரிதமாக அப்புறப்படுத்தும் வகையிலேயே, நிபுணர்கள் குழுவொன்றை அனுப்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment