19 November 2009


ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா-தோழர் ஜேம்ஸ்
தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும். சோதனைகளுடன் நிறைந்த சாதனையாளராக வாழ்ந்ததே அவரின் வாழ்க்கை முறை.மத்திய தர குடும்பத்தில் சகோதரிகளுடன் தனி ஒரு ஆண்மகனாக பிறந்தவரே பத்மநாபா தனது இளம்பிராயத்திலேயே மனித குலத்தின் விடுதலைக்கான சிந்தனையின் பால் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இனைஞர் பேரவையை தனது இளைஞர் அணியாக பாவித்து தமது பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்ப மட்டும் பாவிக்கும் நிலமையும்,தமிழ் மக்களின் பிரச்சனைகளை தேர்தல் வெற்றிக்கான கோஷமாக மட்டும் பாவிக்கும் சுய நலப் போக்கை கண்டித்து தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து பலர் வெளியேறி டாக்ரர் தர்மலிங்கம் தலைமையில் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தை அமைத்தபோது தோழர் பத்தமநாபாவும் அவ்வழியில் தனது அரசியல் பயணத்தை மேற் கொண்டிருந்தார். இரகசிய அரசியல் வேலைத்திட்டத்திற்கு அமைய செயற்பட்டபோது இலங்கை இராணுவத்தினால் தேடப்படும் நிலமை ஏற்பட்டபோது பாதுகாப்பு நிமிர்த்;தம் அவர் தம் குடும்ப உறவுகளால் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவரால் தொடர்ந்தும் வெளிநாட்டில் தங்கியிருந்து படிப்பை தொடர மனம் படிப்பில் லயிக்கவில்லை. வெளிநாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழப்புரட்சி அமைப்பு என்ற இடது சாரி அமைப்பை ஸ்தாபிப்பதில் முன்னிற்று உழைத்தவர். சர்வதேச விடுதலைப் போராட்டத்தின் ஒர் அங்கமாகவே ஈழவிடுதலைப் போராட்டமும் அமையவேண்டம் என்ற சிந்தனை தெளிவு அவரிடம் எப்போதும் காணப்பட்டது. இதன் தொடர்சியாக சர்வ தேச விடுதலை அமைப்பொன்றின் பயற்சிப்பாசறையில் ஆயுதப்பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.இதன் தொடர்சியாக விடுதலை அமைப்பின் அரசியல் செயற்பாட்டிற்காக மீண்டும் இலங்கைக்கு திரும்பினார் ஈழப்புரட்சி அமைப்பின் வெகுஜன அமைப்பாக அன்று எல்லோராலும் அறியப்பட்ட ஈழமாணவர் பொதுமன்னறம் ஊடாக வெகுஜனவேலைகளை முன்னெடுத்தார். தனது பாதுகாப்பின் நிமித்தம் மலையகத்தில் தலைமறைவாக தங்கியிருந்து மலையக மக்கள் மத்தியில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

No comments:

Post a Comment