23 November 2009

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்
எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்



வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவித்தார்

இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றார்.

வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியிலிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்குவரத்து வசதிகளும்
செய்யப்பட வுள்ளன.

No comments:

Post a Comment