21 November 2009

டிசம்பர் 1ம் திகதியிலிருந்து திறந்த முகாம்களாக்கப்படும் - பசில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நலன்புரி நிலையங்கள் திறந்த முகாம்களாக மாற்று வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். செட்டிக்குளம் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் உரையாடிய பசில் ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். 2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு 50,000 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

மேலும் வன்னியிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பைத் தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலமையிலான அரச பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதை இவர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2,80,000 மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நேர்மையான தூய்மையான மீள்குடியேற்ற கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகணத்தில் இடம் பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாக நாம் மீளகுடியமர்த்தினோம். இன்று பல நாடுகளிலும் அகதி முகாம்கள் பல வருட காலமாக காணப்படுகின்றன. அம்மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்

No comments:

Post a Comment