26 November 2009

நந்தன குணதிலக அமைச்சர் பதவியைத் துறந்தார்

இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்த நந்தன குணதிலக, தமது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமாச் செய்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே நந்தன குணதிலக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வேண்டுகோளுக்கமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பிரச்சனை ஏற்படாத வகையில், அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு நந்தன குணதிலக தீர்மானித்ததாக சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது இராஜினாமாத் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா அதிகார சபை என்பவற்றின் அனைத்து அதிகாரிகளுக்கும் நந்தன குணதிலக அறிவித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment