20 November 2009

சூரிச் நகரில் தமிழ்-முஸ்லிம் கட்சித் தலைவர்களின் மாநாடு

தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், இனங்களிடையே ஒற்றுமை, எதிர்கால அரசியல் தீர்வு ஆகியவற்றை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான கலந்துரையாடலை லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ‘தமிழர் தகவல் மையம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, சூரிச் நகரில் இடம் பெறும் இக் கலந்துரையாடலில் தமிழர் விடுதலைக் கூட்டணி- வீ.ஆனந்தசங்கரி, புளொட்- த.சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்- தி.ஸ்ரீதரன், த.தே.கூ,- இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்- ரவூப் ஹக்கீம், இ.தொ.கா- ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி,- பெ. சந்திரசேகரன், ஈ.பி.டி.பி,- டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - சிவநேசதுரை சந்திரகாந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- ஹென்றி மகேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி- மனோ கணேசன், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்- ரிசாட் பதியுர்தீன், முஸ்லீம் தேசிய காங்கிரஸ்- அதாவுல்லா ஆகியோரும் இக் கட்சிகளின் ஏனைய பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment