14 December 2009


யாழில் மனித உரிமை தின நிகழ்வு

மனித உரிமை இல்லத்தினால் நடத்தப்பட்ட மனித உரிமைகள் தின நிகழ்வு டிசம்பர் 10ந் திகதி மிகவும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யபட்டிருந்தது. இந்நிகழ்வினை ஏற்பாடு; செய்த மனித உரிமை இல்லத்தின் தலைவர் செரின் சேவியர், நிர்வாகிகளில் ஒருவரான மேகலா சண்முகம் ஆகியோரையும் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் பங்களித்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த கால்நூற்றாண்டுகளாக நிலவிய யாழ்ப்பாண சூழ்நிலையில் இது ஒரு மங்களகரமான ஆரம்பமாக இருந்தது சுமார் 2000பேர் வரையிலான மனித உரிமை ஆர்வலர்கள் சமூகப் பிரக்ஞை கொண்டவர்கள்,ஆன்மீகவாதிகள் உட்பட பெருமளவிலான தமிழ், முஸ்லீம் பெண்களும் பங்கு பற்றியிருந்தார்கள்.

இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகள் - கடந்த கால்நூற்றாணடுகளாக அகதி முகாம்களில் அல்லலுறும் வடக்கு வலிகாமம் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவது,19 வருடங்களாக வேதனைகளுடன் புத்தளத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வாழும் முஸ்லீம் மக்கள் யாழ் திரும்புவது, காணமல் போனவர்கள் சிறைகளில் வாடுபவர்கள், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் தீர்வு, தீண்டாமை, பெண் ஒடுக்குமுறை, ஜனநாயகம், ஒற்றுமை உள்ளிட்ட விடயங்கள் மனித உரிமைக் கண்ணோட்டதில் பேசப்பட்டன.

மனித உரிமை இல்லத்தின் தலைவி செரின் சேவியர், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன,; பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் ஸ்ரீதரன் மனித உரிமைவாதியும் மாநகரசபை உறுப்பினருமான சுபியான் மனித உரிமைகள் சட்டதரணியும் யாழ் மாநகசபை உறுப்பினருமான றெமிடியஸ் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ஜெயரங்கன் வடக்கு வலிகாமம் இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு கழகத்தை சேர்ந்த ஆ.சி. நடராசா யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் நா. ஜெயக்குமார் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பினால் பாதிப்புற்ற மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த நடராசா உள்ளிட்ட பலரும் தம் கருத்துகளை வழங்கினர்

மக்களிடமிருந்து அரசியல் தலைவர்களுக்கு அதிகாரப்பகிர்வு, இடம்பெயாந்த மக்களின் எதிர்காலம் பற்றிய கேள்விகளும் முன்வைக்கபட்டன. நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வீரசிங்க மண்டப முன்றலில் 9 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ஒற்றுமையை வலியுறுத்தியும்- சகோதரச் சண்டை, யுத்தம் ஆகியவற்றால் காயடிக்கபட்டது மக்களின் வாழ்வு என்பதையும். இழந்து போன பசுமையான அந்தக் காலத்தின் கனவுகளையும் சுமந்து நின்ற அரங்காற்றுகை ஒன்றும் நிகழ்ந்தது.

இது குறிப்பிடத்தகுந்த ஒரு அரங்க நிகழ்வாகும். மனித உரிமைகள் இல்ல யாழ் மாவட்ட இணைப்பாளர் ரி.ஏ.அருள்நாயகம் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து அடுத்து யாழ் பஸ் நிலையம் வரை மனித உரிமை விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நடைபெற்றது. மாலை யாழ் ஆரிய குளத்தில் தீபமேற்றும் நிகழ்வு நடைபெற்றது. மக்களின் மனங்களிலும் முகங்களிலும் மாற்றங்கள் புலப்பட்டன.

சுயபரிசோதனை, ஜக்கியம். உடனடி நீண்டகாலப் பிரச்சனைக்கு தீர்வு என்பன பிரதானமாக வலியுறுத்தபட்டன.

No comments:

Post a Comment