13 December 2009

1500 ஏக்கர் காணி தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதால் குச்சவெளியில் 2000 தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் பாதிப்பு

திருகோணமலை குச்சவெளி பிரசே செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 1500 ஏக்கர் களப்பு நிலக் காணிகள் தனியார் நிறுவனமொன்றுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதால் அப் பிரதேசத்தைச் சேர்ந்த கூமார் 2000 இற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லீம்கள் தங்கள் ஜீவனோபாயத்தை இழந்துள்ளனர் என குச்சவெளி பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண முதலர்வரின் அனுமதியின்றியே இக் காணி குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதென முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

குச்சவெளி பிரதேசத்தின் கடற்கரை பகுதியை அண்டியுள்ள சுமார் 1500 ஏக்கர் களப்பு நிலக் காணிகளில் இந்தப் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் நீண்டகாலமாகவே இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்புகளும் வழங்காத நிலையில் இந்தக் காணிகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதால் 2000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது பாரம்பரிய தொழிலை இழந்துள்ளனர். இந்த காணிகள் நீண்டகால குத்தகைக்கு பெற்றுக்கொண்ட அந் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்றே குறிப்பிட்ட காணிகளை புல்டோசர் கொண்டு பண்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலத்தை பண்படுத்தும் தினத்தன்று கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு குறிப்பிட்ட காணிகள் நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இதற்கான இறுதி அங்கீகார அனுமதியை வழங்குமாறும் கேட்கப்பட்டது.

இருப்பினும் இதற்கான அங்கீகாரத்தை வழங்க மறுத்த கிழக்கு மாகாண முதல்வர் குறிப்பிட்ட ஆவணங்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பகுதியிலுள்ள 200 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பினை உல்லாச பயண ஹோட்;டல்கள் அமைப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், இது நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவுடனேயே உல்லாச பயணத்துறை அமைச்சு இதற்கான நடவடி;ககைகளை மேற்கொண்டுள்ளது

ஏ.எம். சித்திக் காரியப்பர்
வீரகேசரி- வாரமஞ்சரி

No comments:

Post a Comment