13 December 2009

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்


ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மற்றும் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 20 விசேட வாக்குச் சாவடிகளும் கொத்தணி வாக்குச் சாவடிகளும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலுள்ள வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல்களை அந்தந்த பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆராயவென நேற்று வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களுக்கு தற்காலிக ஆள் அடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

துணுக்காய், மல்லாவி, ஜயபுரம், முழங்காவில் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 20 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்களுக்கு வெளியேயும், நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் விதத்தில் நிவாரணக் கிராமங்களுக்கு வெளியேயும் கொத்தணி முறையிலான வாக்குச் சாவடிகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment