28 December 2009

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கால்கள்

யுத்தம் காரணமாக கால்களை இழந்த மக்களுக்கு எதிர்வரும் 2010ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்தியா செயற்கை கால்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமான பகவான் மாவீர் விக்லாங் சஹாயட சமித்தி என்ற அமைப்பின் ஊடாக இந்த செயற்கை கால்கள் வழங்கப்படவுள்ளன.
யுத்தம் காரணமாக சுமார் 2000 பேர் கால்களை இழந்துள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜெய்ப்பூர் செயற்கை கால் உற்பத்தி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கால்களின் உதவியுடன் வழமையான சகல செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment