01 December 2009

அரச கருமமொழிக் கொள்கையை அமுலாக்க, அதிகாரிகள்!

அரச கருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திற்கும் தலா இரண்டு அதிகாரிகளை நியமிக்க, அரசியல் அமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அரச நிறுவனங்களில் தமிழ் மொழிமூலம் வழங்கப்படவேண்டிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.

நிறுவனத் தலைவர் மற்றும் அவருக்கு கீழ் செயற்படும் முக்கிய அதிகாரி என்பவர்களே இந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அரச கருமொழி கொள்கை உரிய முறையில் நடைமுறைப்படுவது தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகளே அரசாங்கத்திற்குப் பொறுப்புகூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த நியமனங்களை விரைவில் வழங்கும் வகையில் அது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். நியமிக்கப்படும் அதிகாரிகள் அரச கரும மொழிக் கொள்கையை உரிய முறையில் செயற்படுத்தத் தவறும் பட்சத்தில் அதுகுறித்து தம்மிடம் முறைபாடு செய்ய முடியும் எனவும் அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கூறினார்.

இதற்கமைய அரச நிறுவனங்களுக்குத் தமிழ் மொழியில் அனுப்பிவைக்கப்படும் கடிதங்களுக்கான பதில்கள், தமிழ் மொழியிலேயே அனுப்பிவைக்கப்படவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment