10 December 2009

மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு
ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதோடு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள மக்களிடம் ஜனாதிபதி தெரிவிக்கையில் “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவரும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.

துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற்கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாணவர்களுக்காக 23,000 தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடிமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment