10 December 2009

அதிகாரபரவாக்கல் அமுலுக்கு அரசும் எதிரணியும் இணைந்து செயற்படுமென அமெரிக்க நம்பிக்கை - பிளேக்

சகல இலங்கையர்களும் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாகப் பங்குகொள் வதை உறுதிப்படுத்தும் ஒரு அதிகாரப் பரவலாக்கல் முறைமையில் ஒரு உடன் பாட்டை ஏற்படுத்த அரசாங்கமும், எதிரணியும் ஒன்றிணைந்து செயல்படும் என்பதே அமெரிக்காவின் நம்பிக்கை என்பதை இங்கு அரசாங்க, அரச சார்பற்ற தலைவர்களைச் சந்தித்த போதெல்லாம் தாம் வெளிப்படுத்தி வந்துள்ளதாக அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை மக்களுக்குப் பல்வேறு வாய்ப் புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு தலைமுறைக்கு மேலான காலத்தில் தற்போது இலங்கை மக்கள், யுத்தத்தினால் பிளவுபடாத, பயங்கரவாதத்தினால் அல்லது வன்செயல்களால் சிதறிப்போகாத ஒரு நாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்கள் என்றார். அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்


நாட்டுக்கு ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருவதற்கு இலங்கை அர சாங்கமும் மக்களும் நல்லிணக்கம், புனர்நிர்மாணம் ஆகிய சிரமமான நடைமுறைகளைப் பொறுப்பேற்க வேண்டும். முகாமிலுள்ள இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையோரை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கும் மீதமுள்ளவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை அளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது.

மெனிக்பாமுக்கு விஜயம் செய்தபோது, இந்த நடைமுறைகளை நேரில் கண்ணுற்றேன். முகாம்களில் வசிப்பவர்கள் வெளியே செல்வதற்கும் முகாம் திரும்புவதற்கும் கூடுதல் சுதந்திரம் பெற்றுள்ளார்கள். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை மன்னார் பகுதியில் கண்டேன். கண்ணிவெடி அகற்றும் பணிகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

ஜனாதிபதி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம ஆகியோரையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் இந்த விஜயத்தின் போது சந்தித்தேன். எல்லாருமே இன்னமும் பல பணிகள் செய்ய இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டார்கள். வடக்கின் பல பகுதிகளில் பெருமளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும் புனர்நிர்மாணப் பணிகளும், உட்கட்டமைப்பு வேலைகளும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.

இந்தப் பகுதிகளுக்கு உதவி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. வடக்கில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஏற்கனவே நாங்கள் 6.6 மில்லியன் டொலரை வழங்கியுள்ளோம். தொடர்ந்தம் கண்ணிவெடி அகற்றுவதற்கு உதவி வழங்குவோம். எந்த முயற்சிகளுக்கு எங்கள் உதவி தேவை என்பதையும் நாம் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

உங்கள் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை அடுத்த மாதம் நீங்கள் தீர்மானிக்க இருக்கிறீர்கள். உங்கள் நாட்டுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். பல தசாப்தங்களுக்குப் பின்பு இலங்கையர்கள் அனைவரும் ஐக்கியமாக தேசியத் தேர்தல் ஒன்றில் வாக்களிக்கப் போகிறீர்கள். சுதந்திரமாகவும் நேர்மையா கவும் தேர்தலை நடத்துவதற்கு பலத்த ஆதரவளிப்பதைத் தவிர, அமெரிக்கா ஏனைய நாடுகளின் தேர்தல்களில் பக்கச்சார்பாக நடந்து கொள்வதில்லை.

எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டே செல்லும் என்பதில் நான் நம் பிக்கையாக இருக்கிறேன். இலங்கை இன்னமும் அமெரிக்காவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளி நாடாகும். வேறெந்த ஒரு தனிநாட்டிலும் பார்க்க இலங்கையில் இருந்தே அமெரிக்கா மொத்த ஏற்றுமதிகளில் கால்வாசிக்கு மேலானவற்றைப் பெற்று வருகிறது. நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகும். நடைமுறையில், செய்தியாளர்கள் தங்கள் எண்ணக் கருத்துக்களை எதுவித அச்சமோ, பழிவாங்கல் பீதியோ இன்றி சுதந்திரமாக வெளியிடக் கூடியதாக இருக்கவெண்டும். தனிப்பட்டவர்கள் தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும். மற்றவர்களின் உரிமைகளை மறுப்பவர்கள் அவர்களது செயலுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

முடிவாக, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே வலுவாகவும், நெருக்கமாகவும் நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன். அமெரிக்கத் தூதுவர்களின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாடுதிரும்பியுள்ள உங்கள் நாட்டு அமெரிக்கத் தூதுவர் புட் டெனிஸ், எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விருத்தி செய்வதற்கு ஓங்கிக் குரல் கொடுப்பவராவார். நான் மேலே குறிப்பிட்ட விடயங்களில் இலங்கை முன்னேற்றமடையவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளும் எதிர்வரும் மாதங்களிலும், வருடங்களிலும் வளர்ந்து செல்லும்

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment