30 December 2009

மறுவாழ்வு பணிகளில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் சுமார் பதினைந்து மாதங்களின் பின்னர் அதன் சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி, கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்ற பணியின் முன்னேற்றத்திலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றும் பணிகளின் வேகமும் தங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

நன்றி- பி.பி.சி

No comments:

Post a Comment