01 February 2010

இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய இந்தியா உதவும்

சிவசங்கர் மேனன் தமிழக முதல்வரிடம் தெரிவிப்பு


இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அதிகாரப் பகிர்வு வழங்குவதில், அவர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனன், தமிழக முதல்வர் மு. கருணாநிதியை சந்தித்த பின் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புச் செயலராக இருந்த எம்.கே.நாராயணன், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வெளியுறவுத் துறை செயலர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்திருந்த சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார்.

வெளிநாட்டு விவகாரங்களில், குறிப்பாக இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை நிர்ணயிப்பதிலும், செயல்படுத்துவதிலும் சிவசங்கர மேனன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இலங்கையில் போர் தீவிரமாக நடந்த போது, மத்திய அரசின் சார்பில இலங்கை வந்த அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்;தை நடத்தினார்.

தற்போது, தேசிய பாதுகாப்புச் செயலர் பதவி பொறுப்பை ஏற்றபின், முதல் முறையாக சென்னை வந்த சிவசங்கர மேனன், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து முதல்வரிடம் அவர் விளக்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து, இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. அங்குள்ள தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு மேனன் தெரிவித்தார்

நன்றி- அரச செய்தி ஊடகம்

1 comment:

  1. Contact for partnership opportunities at mohit.j@peopleinteractive.in or call +912243517107

    ReplyDelete