21 March 2011


உலக மானிடத்தின் கடமை



இன்று யப்பானில் ஏற்பட்ட நிலைமை நாளை யாருக்கும் நேரலாம் . ஏன் இலங்கையர்கள் நாம் அனுபவிக்கவில்லையா . 2004 டிசம் சி சுனாமி அணுகதிர் வீச்சு என அத்தனை துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.

ஆனால் நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு பிரசைகளை அழைத்துக் கொள்வதில் கடுமையான சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் அது தவறென்றில்லை.

ஆனால் நரகத்தை விட்டு சக மனிதர்கள் வெளியேறுகிறார்கள் என்ற எண்ணம் ஜப்பானிய மக்களுக்கு வரக் கூடாது. இந்த இந்த இடத்தில் தேச எல்லைகள் கடந்து சிந்திக்க வேண்டும் .

இந்த அனர்த்தத்தை எமக்கு நேர்ந்ததாக எடுத்துக் கொண்டு முழு உலகமும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். ஒன்றாக துரித கதியில் செயற்பட வேண்டும்.
உலகம் ஒன்று சேர்ந்து துரித கதியில் செயற்பட்டால் இந்த அணு கதிர் வீச்சை நிறுத்துவதென்பது முடியாத காரியமல்ல.

அவர்கள் அணு உலையை குளிர்விக்க ஹெலிகப்டர்களில் இருந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள் தற்போது ஜப்பானிய தொழில் நுட்பவியலாளர்கள் குளிரூட்டும் பம்பியின் வயரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த காரியங்களில் உலகத்தவரும் உதவலாம். சில மணித்துளிகளிலேயே தீர்வுகாணலாம் .

ஆனால் நாடுகள் எல்லைகள் என்ற அந்நியப்பட்ட சிந்தனை முறை நாம் மனித குலம் என்ற என்ற எண்ணம் மானசீகமாக வருவதைத் தடுக்கிறது.
இந்த அனர்த்;தத்தில் உலகின் 3வது பொருளாதார வல்லரசு என்று கூறப்படும் ஜப்பானே திணறுகிறது.

2004 சுனாமியன் பின்னராவது ஜப்பானிய அரசு சிந்தித்திருக்க வேண்டும் . இந்த அணு உலைகள் அமைந்திருக்கும் இடம் பாதுகாப்பானதா என்று
ஏன் சில மாதங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னாவது சிந்தித்திருக்க வேண்டும் உலகில் தற்போது நிலவும் உற்பத்தி உறவு முறை அத்தகைய சிந்தனைக்கு தடைபோடுகிறது.

இந்த உற்பத்தி உறவுமுறை மாறவேண்டும் . பங்குமார்க்கட்டை வைத்து நாட்டின் வளர்ச்சியை அளக்கும் முறை மாறவேண்டும்.

உலகில் பொருளாதார ஆதிக்கத்தை செலுத்துவதற்காக புவியின் வெப்பநிலை அதிகரித்துச் செல்வதைப்பற்றி உலகின் பொருளாதார வல்லமைகள் என்று சொல்லப்படும் நாடுகள் அவ்வளவு கவலைப்படுவதாய் இல்லை என்பதும் அவர்களே அதற்கு காரணமாய் இருக்கிறார்கள் என்பதும் வேதனையான உண்மையாகும்

இன்று புவிக்கோளின் இயற்கைக்கு விரோதமான காரியங்களை சவால்களை எதிர்கொண்டு இயற்கையுடன் இணங்கி வாழும் போக்கையே முன்னெடுக்க வேண்டும் .

ஈவிரக்கமற்ற வளங்களை சூறையாடும் ஏகாதிபத்திய பொருளாதார உறவுமுறைக்கு மாறாக எல்லாரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு எனச் சிந்திக்க வேண்டும்

இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை காலாவதியானது என்பதையே இயற்கை மற்றும் அனர்த்தங்களும் சரி சமகால மக்கள் கிளர்ச்சிகளும் சரி உணர்த்தி நிற்கின்றன.

பல்லாயிரக்கணக்கான உறவுகளின் இழப்புக்களுக்கு மத்தியில் குளிரிலும் இருளிலும் அணுக்கதிர் வீச்சு அபாயங்கள் மத்தியில் வாழும் ஜப்பானிய மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக துரிதமாகச் செயற்படுவது உலக மானிடத்தின் கடமை .

ஸ்ரீதரன் (சுகு)

No comments:

Post a Comment