
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை
ஸ்ரீலங்காஅரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்(ரி.என்.ஏ) இடையே தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில், மார்ச் 18, வெள்ளிக்கிழமை நடந்த அதன் மூன்றாவது கட்டப் பேச்சுக்கள் சில சாதகமான முன்நகர்வுகளைப் பதிவு செய்திருக்கின்றன.
பேச்சுக்களின் பின்னர் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்ட கீழ்கண்ட குறிப்பு பேச்சு வார்த்தைகளின் சாரத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீலங்காவில் வாழும் சகல மக்களினதும் அபிலாசைகளும் சந்திப்பதற்குப் பொருத்தமான அரசியலமைப்பு ஒழுங்குகளைப் பற்றிக் கலந்துரையாடல்களை இருதரப்பும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு கட்டமைப்புக்கு வருவதற்கான கண்ணோட்டத்தில் தங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர அவர்கள் சம்மதித்துள்ளார்கள்.”
மூன்றாம் கட்ட அரசாங்க – ரி.என்.ஏ தரப்பு பேச்சு வார்த்தைகள், சாதகமான ஒரு முடிவைத் தெரிவிக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் ஒரு உள்ளத்துணிவு பிறக்கிறது. முந்தைய இரணடு சுற்று பேச்சுக்களுக்கு அப்பாலும் கடந்த சில வாரங்களாக இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு இடையூ+று ஏற்படத்தக்கதான அச்சுறுத்தும் அரசியல் முறுகல் நிலை பரவியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ}னம் சிறீதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சித் தாக்குதல் இதைத் தடைசெய்யும் ஒரு நிகழ்ச்சி. மார்ச் 12 டெய்லி மிரர் பத்திரிகையில் இந்தப் பத்தி அந்தத் தாக்குதலை மீள்நிலைப் படுத்தி ரி.என்.ஏ நீண்டகாலமாகத் துயருறும் தமிழ் மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளை அந்தச் சம்பவம் தடையேற்படுத்த விட்டு விடக்கூடாது என ரி.என்.ஏ யிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.
No comments:
Post a Comment