
கிழக்கு பல்கலை காலவரையின்றி மூடப்பட்டது
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையத்தை அகற்றுமாறு கோரி மாணவர்கள் புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாணவர்களுக்கும் பொலிசாருக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் (மட்டக்களப்பு நகரிலுள்ளது) தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதோடு உள்வாரி மற்றும் வெளிவாரி விரிவுரைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் காவலரணை அகற்றுவது பாதுகாப்பு அமைச்சுக்குட்பட்ட விடயம் என்பதால், மாணவர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாதுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் எனவும் அதனைத் தொடர்ந்தே பீடங்கள் மூடப்பட்டதாக பதில்துணை வேந்தர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்
No comments:
Post a Comment