31 March 2011

ஜப்பானிய கதிர் வீச்சு அண்டை நாடுகளுக்கும் பரவுவதாக தகவல்

ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புகுஷிமா அணு உலையிலிருந்து கதிர்வீச்சு பரவ ஆரம்பித்தது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியதைத்

தொடர்ந்து தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணு கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதேவேளை மேற்படி அணு உலைகளுக்கு அண்மித்ததாக உள்ள கடல் நீரில் கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment