அரசின் உறுதி மொழிக்கு முரணாக வடக்கில் ஆட்பதிவு
வட பகுதியில் குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக த.தே.கூ பா.உ க்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
கட்டாயமாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுமென நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளிக்கப்பட்ட போதிலும் பதிவுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களைப் பாதுகாப்புப் படையினர் பதிவு செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் விடயம் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதனை உடனடியாக இடை நிறுத்துவதென உயர்நீதிமன்றத்தில் இம்மாதம் 3 ஆம் திகதி சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.
சட்ட மா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல் புவனேக அலுவிகார இந்த உறுதிமொழியை அளித்திருந்தார். தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த உரிமைகள் மீறல் மனுத்தொடர்பாகவே இந்த உறுதிமொழி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment