28 March 2011

தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது.


ஸ்ரீலங்கா இந்தியாவிடம் தான் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்குள் தமிழர் பகுதிகளில் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதாகச் சொன்னது. ஆனால் இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட வகையில் அந்த உறுதிமொழியில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள்

அமெரிக்க தூதுரகத்தின் பல தந்திகளை விக்கிலிக்ஸ் மூலமாக த ஹிந்துவுக்கு காணக் கிடைத்ததன் பேறாக வெளிப்பட்டது. என்னவெனில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ உடனான அதன் இராணுவ நடவடிக்கை ஒரு முடிவிற்கு வருவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே ஒரு அதிகாரப் பகிர்வு திட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி இந்தியா, ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தது என்கிற விடயமாகும்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது ஆனால் இந்தியா அதன் உள்நுளைவைத் தடுத்துவிட்டது என அந்தத் தந்திகள் மேலும் வெளிப்படுத்தின.

இராணுவ நடவடிக்கைகள் முடிவினை நெருங்கிக் கொண்டிருக்கையில், வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன், அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பீற்றர் பர்லேயிடம் 15 மே 2009ல் தெரிவித்தது ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு மீளவும் உறுதியளித்திருப்பது ”13வது திருத்தத்திலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கத்தை கூடிய விரைவிலேயே நடைமுறைப் படுத்துவதை அரசாங்கம் முன்னெடுக்க இருப்பதாக” என்று. (207268 : இரகசியமானது, மே15. 2009)

ஆனால், அந்தத் தந்தி”மேனன் அதில் நம்பிக்கையற்றவராக இருக்கிறார்” என்று குறிப்பிட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே.நாராயணன் அதைப்பற்றி அதிக நன்னம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஏப்ரல் 24ல் அவர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்து திரும்பியதும் அவர் அமெரிக்கா பொறுப்பதிகாரியிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ “அதிகாரப் பகிர்வை (13வது திருத்தத்திலும் கூடுதலான) முன்னெடுப்பதை விரும்புகிறார், மற்றும் ஸ்ரீலங்கா தமிழர்களின் மனங்களை வெல்வதற்கான திட்டத்தினை அவர் விரைவில் ஏற்படுத்துவார்” என தெரிவித்தார். (204118 : இரகசியமானது. ஏப்ரல் 15,2009)

முன்னர் ஜனவரி 2009ல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு தந்தியில் இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜியின் விஜயத்தின்போது ஜனாதிபதி ராஜபக்ஸ அவருடன் 13வது திருத்தத்திலும் கூடுதலான திட்டமொன்றினைப்பற்றி; பேசியதாக அறிவித்திருத்;தது. (189383 : இரகசியமானது, ஜனவரி 29, 2009)


No comments:

Post a Comment