28 March 2011

ஸ்ரீலங்காவில் இன்னமும் ஒரு குழுவினருக்கு உத்தரவாதம் செய்து பராமரிக்கப் போதுமானளவு பணிகள் உள்ளது- ஐ.சி.ஆர்.சி

நவம்பர் 2010 ல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐசிஆர்சியிடம் யாழ்ப்பாணத்திலும்,வவுனியாவிலும் உள்ள அதன் அலுவலகங்களை மூடிவிட்டு அதற்கே உரிய நடவடிக்கைகளை கொழும்பிலிருந்தே நடத்தும்படி கேட்டுக் கொண்டது. ஐசிஆர்சி தூதுக்குழுவின் தலைவர் ஈவ்ஸ் ஜியோவண்ணோனியும் மற்றும் இரண்டு ஸ்ரீலங்கா உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் உள்ள அலுவலகங்களில் இருந்து கடந்த காலத்திலும் மற்றும் எதிர்காலத்திலும் நிகழ்ந்த மற்றும் நிகழவிருக்கிற ஐசிஆர்சியின் நடவடிக்கைளைப் பற்றி எதிரொலிக்கிறார்கள்.

கேள்வி:- ஐசிஆர்சி ஸ்ரீலங்காவில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும்,வவுனியாவிலும் என்ன செய்து வருகிறது?

ஐசிஆர்சி, ஸ்ரீலங்காவில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி)யின் எண்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட எழுச்சியின் போது ஆரம்பித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரீரீஈ) கிளர்ச்சிவரைத் தனது பணியைத் தொடர்ந்து வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மறுவாழ்வு பெறுவோருக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிலையம். ஐசிஆர்சியின் ஆதரவுடன் வருடந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் (மேலே உள்ள நிலக்கண்ணி வெடியினால் பாதிப்புற்றவர்களைப் போல) உடல் ரீதியான மறுவாழ்வினைப் பெறுவதுடன், நுண் கடன் திட்டங்களாலும் பயன் பெறுகிறார்கள்.

எங்களது மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னிலைப் படுத்துவது, பொதுமக்கள், சிறைக் கைதிகள், நோயுற்றவர்கள் மற்றும் காயம் பட்டவர்கள் என எல்லாப் பகுதியினருக்கும் பாதுகாப்பும் உதவியும் வழங்குதல், என்பதனையே. அநேகமான விடயங்களில் நாங்கள் ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். அதற்கு நல்ல உதாரணமாக பிரிந்து போயுள்ள குடும்ப அங்கத்தினரது தொடர்புகளை புனருத்தாரணம் செய்வதில் அவர்கள் மிக முக்கியமான பங்கினை வகித்துள்ளார்கள். நாங்கள் எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியுடனேயே எங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிரான பகுதியினர்களுக்கிடையே நடுநிலையான இடைத்தரகர்களாக பணியாற்ற இயலக் கூடியதாக இருந்தது.


No comments:

Post a Comment