
புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் இயங்கவில்லை- தமிழக டிஜி.பி
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் 3 பயிற்சி முகாம்கள் இயங்குவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை இந்தியாவும் தமிழகப் பொலிஸாரும் நிராகரித்துள்ளனர்.இந்தக் கருத்தானது ஆதாரமற்றதெனவும் தமிழ் நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ புலிகளின் முகாம்கள் எதுவும் இல்லை என இந்தியா தெரிவித்ததுள்ளது. தமிழக மாநிலத்தில் புலிகளின் முகாம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் இக்கருத்து ஆதாரமற்றதும், எந்தவொரு யதார்த்தத்தையும் கொண்டிராதது எனவும் தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வி. உருத்திரகுமாரன், நோர்வேயைத் தளமாகக் கொண்ட நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோரின் பயிற்சி முகாம்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தொடர்பாக மாநிலப் பொலிஸார் முழு அளவில் விழிப்புடன் உள்ளனர். தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவு முழு அளவில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது என்று தமிழக டி.ஐ.ஜி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாநிலப் பொலிஸாரும் கரையோரக் காவல் படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமையை குறிப்பிட்ட டி.ஐ.ஜி சென்னையிலுள்ள பௌத்த நிலையமான மகா போதி சங்கத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல் இலங்கைத் தமிழர்களின் அனுதாபிகளினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளினால் அல்ல என்றார்.
No comments:
Post a Comment