.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமை மற்றும் நல்லுறவை பேணாமை ஆகியவை ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கான ஆதரவுவீழ்ச்சியடைந்தமைக்கான காரணிகளில் ஒன்றாகும் என பேராசிரியர் ரஜிவ் விஜேசிங்க கொழும்பு ஸ்ரான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள ஏ.பி.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது. 2009ம்ஆண்டுக்கு பின்னர் ஜெனீவாவில் இலங்கைக்கான ஆதரவு குறைந்து வருவதற்கான முக்கியமாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வுகளோ அல்லது நேரடியான கலந்துரையாடல்களோ தற்போது இடம்பெறுவதில்லை. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த கற்றறிந்த பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் தருஸ்மன் குழு அமைக்கப்பட்டதன் பிற்பாடு கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு மிக உச்ச பணியினை ஆற்றியிருந்தது. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆறுமாத கால அவகாசம் கோரப்பட்டிருந்த போதும் அது தொடர்பான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாமையினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார். அக்குழுவினர் த.தே.கூ ஐ சந்திக்க வேண்டுமென நான் கோரிய கோரிக்கைக்கு அக்குழு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காததுடன் த.தே.கூ சந்திருக்கவில்லை.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையிலும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் மூலம் சர்வதேசத்துடனான உறவுகைள் வலுப்பெறுவதற்கு வழிவகுக்கும். அண்மையில் தென்னாபிரிக்காவின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ஜேகப் கமா யுதார்த்தமான விடயங்களை தெளிவாக அறிந்து கொண்டார். சிறந்த வெளிநாட்டு கொள்கையின் மூலம் பல நாடுகளின் ஆதரவையும் நல்லுறவையும் பெற்றுக்கொள்ள முடியும்அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
ஐ.நா சபைக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தயான் ஜயதிலக்க மேற்குலகை பொறுத்தவரையில் ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளை 2006ம் ஆண்டு முதலே ஆரம்பித்திருக்கின்றமையை வெளிறாட்டு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. 2009ம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு அதிகளவான நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
ஆனால் கடந்த காலங்களில் 12 நாடுகள் வாக்களிக்கும் நிலைமையே காணப்படுகின்றன. முக்கியமாக இலங்கையில் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சில உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட தயாராக உள்ளன. இருப்பினும் அந்நாடுகள் முன்வைக்கும் யோசனைகளையும் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் சோல்பரி பிளஸ் அரசியலமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி இயற்கையான கட்டமைப்புக்களை உருவாக்க முடியும் என்றார் தயான்.


No comments:
Post a Comment