23 January 2014

உயிரிழப்புக்கள், காணாமல் போதல்கள், காயமடைதல்கள், சொத்து இழப்புக்கள் பற்றிய அறிக்கை விரைவில்

கடந்தகால யுத்த நிலவரங்களால் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், காணாமல் போதல், காயமடைதல்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக தொகை மதிப்பு மற்று புள்ளி விபரம் பற்றிய கணக்கெடுப்பு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது பற்றி விபரங்கள் அறிக்கைகளை இன்னும் நான்கு வாரங்களில் வெளியிடவுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சி. குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி விபரிக்கையில் கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்து விட்டன. கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்கள் யாவும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

1982ம் ஆண்டு முதல் தற்போது வரை உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இழப்புக்கள் கணக்கெடுப்பை 16000 அதிகாரிகள், 400 கண்காணிப்பு உத்தியோகத்தர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. யுத்த பாதிப்பு குறித்து நாடுதழுவிய கணக்கெடுப்பின் முதலாவது அறிக்கையை புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிடும். ஆத்தோடு 1982 முதல் இடம்பெற்ற உயிரிழப்புக்கள். காணாமல் போதல், காயமடைதல்கள், மற்றும் சொத்து இழப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டாவது அறிக்கையின் போது வெளியிடப்படு;ம் என்றார். 

கணக்கெடுப்பு பற்றிய விமர்சனம் பற்றி அவர் தெரிவிக்கையில் யுத்தம் நடைபெற்ற நாட்டில் இவ்வாறான கணக்கெடுப்புக்களை மேற்கொள்வதற்கான ஒரு முறைமை காணப்படுகிறது. சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற முறைமையை போலவே தாங்களும் மேற்கொள்ளவதாக குறிப்பிட்ட அவர் இவ்வாறான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ளும் பல்வேறு வகையான வரையறைகள் உள்ளன. அதாவது கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது ஒரு குடும்பம் முழுமையாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் அவர்கள் கணக்கெடுப்புக்கள் இடம்பெற மாட்டார்கள். 

அதேபோன்று ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உயிரிழந்து இருந்தால் அவர்களும் கணக்கெடுப்புக்கு உள்வாங்கப்பட மாட்டார்கள். இவ்வாறான தகவல்களை தவிர ஏனைய தகவல்கள் அனைத்தும் கணக்கெடுப்புக்கு உள்வாங்கப்படும். தற்போது தவிறவிடப்பட்ட தகவல்கள் எதிர்காலத்தில் அறிக்கையில் உள்ளடக்கப்படுவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

No comments:

Post a Comment