10 January 2014

மாகாணசபைகள் இல்லாத புதிய அரசியலமைப்பை எதிர்க்கின்றேன்- வாசு

ஒற்றையாட்சுpக்குள் மாகாணசபைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தொடர்பாக உடன்பாடில்லை எனவும் அதனை தான் எதிர்ப்பதாகவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பது எனது கொள்கையாகும். ஓற்றையாட்சி வலியுறுத்தப்படுவதை நான் எதிர்க்கவில்லை ஆனால் ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகள் அதிகார பரவலாக்கல் உள்ளடக்கப்பட வேண்டும். மாகாணசபைகள் இல்லாத ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அத்தோடு ஒற்றையாட்சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்தமில்லாததாகும். இந்தியாவில் இந்த முறைமைதான் உள்ளது. அங்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாநில ஆட்சி நடைபெறுகிறது. ஆங்கு நாடு பிரிந்ததா? இல்லையே. மக்கள் அதிகாரங்களோடு வாழ்கின்றனர். 
பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டும் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது வெற்றிபெற போவதில்லை. தமிழ், முஸ்லீம் மக்களின் ஆதரவும் அதற்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நடைமுறை சாத்தியமாகாது. 

மன்னாரில் மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக தெரிவிக்கையில் மன்னார் மட்டுமல்ல மாத்தளை மனித புதைகுழிகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இது நீதியானதும் சுயாதீனமாகவும் நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர் வாசு. 

No comments:

Post a Comment