10 January 2014

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் - குர்ஷித்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். காபார் சவுத் ஆசிய நியூஸ் ஏஜென்ஸிக்கு அளித்த போட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்திருந்ததாவது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் செய்யப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையாக உள்ளோம். இலங்கை அரசாங்கம் எமது உதவியை கேட்டது. பதிலுக்கு இந்தியவிலுள்ளது போன்று மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரங்களை கையளிக்கப்படும் என எமக்கு உறுதியளிக்கப்பட்டது என்றார்.

மேலும் இலங்கை இறைமையுள்ள நாடு. தமது நாட்டை பற்றி  அவர்களே தீர்மானிப்பர். 13ஆவது திருத்தம் இலங்கையிலுள்ள தமிழர் மற்றும் வேறு இனங்களுக்கு கௌரவத்துடன் வாழும் உரிமையை வழங்கும் என்றார்

No comments:

Post a Comment