10 January 2014

நிரந்தர நியமனத்திற்கான நகரசபை ஊழியர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு

வவுனியா நகர சபை ஊழியர்களாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக பிரதேச சபைகள், மற்றும் நகரசபைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி வவுனியாவில் மேற்கொண்டு வரும் அடையாள வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து  மன்னார் மாவட்டத்தில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகள் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு முன்பு; நேற்று (10-01-2014)  பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தற்போது நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கா.பொ.த. சாதாரண தரத்தில் 6 பாடங்களும் இரண்டு பாடங்களில் 'சி' சித்தி தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகைமை அடிப்படையில் எதிர்வருங்காலங்களில் சேவைக்கு அமர்த்தப்படுபவர்களிடம் கோரும்படியும், தற்போது சேவையில் உள்ளவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த பகிஸ்கரிப்பில்  மன்னார் நகர சபை, பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை,மாந்தை பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும்  சாரதிகள் சுமார் 60 பேர் வரை இணைந்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது காலை 10.30 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்   பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடிய அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிதத்ததையடுத்து பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

No comments:

Post a Comment