19 February 2014

வன்னியில் 407.51 ஹெக்டயரில் 27,000 மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வன்னியில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் டாஸ் நிறுவனத்தினால் சுமார் 407.51 ஹெக்டயர் நிலப்பரப்பில் சுமார் 27,000 மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக டாஸ் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் நடவடிக்கை மேலாளர் கெனி முமைதீன் தெரிவிக்கையில் சுமார் 300 பணியாளர்களை கொண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு  ஆகிய பிரதேசங்களில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மிதிவெடிகள் அகற்றும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக கிளிநொச்சியில் கண்டாவளை, பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தடுவான் கொட்டி, நஜிகுட்டியாறு, உமையாள்புரம்  பெரியகுளம் ஆகிய பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்hன், புதுக்குடியிருப்பு, ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

யுத்தத்தின் பின்னர் வெடிபொருட்களை அகற்றி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கும் அவர்களின் வாழ்வாதார பயிர் செய்கையை மேற்கொள்வதற்கும் ஏற்றவகையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் 300 பணியாளர்களை கொண்டு 2010ம் ஆண்டு இம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் 26,995 மிதிவெடிகளும், 17,217 எதிர்ப்பு கண்ணி வெடிகள், 11,404 எறிகணைகள், 59,257 வெடிக்கும் நிலையில் காணப்பட்ட  கைக்குண்டுகள் மற்றும் ஏனைய வெடிபொருட்கள்  அழிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.கெனி முமைதீன். 

உள்ளுர் அமைப்பாக செயற்பட்டு வரும் இந்த டாஸ் நிறுவனம் விதவைகள், முன்னாள் போராளிகள் என பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

No comments:

Post a Comment