19 February 2014

ஐ.நா மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காவிட்டால் தொடர்ந்தும் இந்த விவகாரம் எழுப்பப்படும்;

கடந்தகால தவறுகள் குறித்து விசாரிப்பது கடினமானதாக இருந்தாலும், அது குறித்து விசாரித்து, எங்கே தவறுகள் நிகழ்ந்தன, சட்டத்தை மீறியது யார் என்று கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டியது முக்கியம் என   கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் ஜோன்ரன்கின் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது அமெரிக்கத் தீர்மானம், தற்போதைய நிலைமைகள், தற்போதைய பிரச்சினைகள் பற்றிய கவலைகளின் வெளிப்பாடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, சிறுபான்மை மதத்தினர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை நாம் காண்கிறோம்.  இன்னொரு புதிய விடயம், நம்பகமான உள்நாட்டு விசாரணை அழைப்புக்கு இது வரை பதிலளிக்கப்படவில்லை. இது நடக்காத பட்சத்தில், அனைத்துலக விசாரணையைக் கோருவது என்பதில் எமது பிரதமர் தெளிவாக இருக்கிறார். 

கடந்த ஓகஸ்ட் மாதம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, முறையான உள்நாட்டு பொறிமுறைகள் உருவாக்கப்படவில்லை என்றும், அனைத்துலக விசாரணையை கோருவது அனைத்துலக சமூகத்தின் கடமை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

தீர்மான வரைவை பார்க்க நாம் காத்திருக்கிறோம். அமெரிக்கா மீண்டும் தீர்மானத்துக்கு தலைமை தாங்க வாய்ப்புள்ளது. பிரிட்டன் அதற்குப் பலமான ஆதரவாளராகவும் இணை அனுசரணையாளராகவும் இருக்கலாம். அமெரிக்கா சுட்டிக்காட்டிய கவலைக்குரிய விடயங்களுடன் பிரிட்டனும் இணங்குகிறது. அவற்றுக்குப் பதிலளிக்கப்படும் என்று நாம் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் இருந்து அனைவரும் விலகப் போவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிரொலித்துள்ளது. அவற்றுக்குப் பதிலளிக்காவிட்டால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எழுப்பப்படும். இந்த விவகாரங்களுக்கு ஐ.நா விடம் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் உள்ள பொறிமுறைகளின் மூலம் பதிலளிக்க முடியும். 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ அடுத்த மாதம் லண்டன் செல்லத்திட்டமிட்டுள்ளது குறித்து, இன்னும் எனக்கு உறுதியான தகவல் ஏதும் கிட்டவில்லை. அவர் திட்டமிட்டபடி, லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டால், எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்வதற்குரிய சாத்தியங்களை நிராகரிக்க முடியாது.   பொதுநலவாய நிகழ்வில் பங்கேற்பதற்காக, அடுத்த மாதம் இலங்கை ஜனாதிபதி லண்டன் செல்லவுள்ளார் என கொழும்பு ஊடகத்தின் செய்தி மூலமே அறிந்தேன். அதுபற்றிய உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன். அவர் அங்கு வந்தால், பொதுநலவாயக்  கூட்டங்களில் பங்கேற்பதற்குரிய வசதிகளைச் செய்து கொடுப்போம். ஆனால், அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு பிரிட்டன் மக்களுக்கு உரிமை உள்ளது. 

இலங்கை ஜனாதிபதி அங்கு வந்தால் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  எனினும், அவர் அங்கு வரத் தீர்மானித்தால், அவரது பயணம் வெற்றிகரமாக அமைவதற்குரிய வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.   

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எவரும் இப்போது பேசவில்லை. ஒரு சரியான உள்நாட்டு செயல் முறைகள் இல்லாத நிலையில் தான், அனைத்துலக செயல்முறைகள் உள்ளே வருகின்றன. விசாரணையின் முடிவு என்னவென்று தெரிய வேண்டும்.  எங்கே அரசுகள் அல்லது தனிநபர்கள், தவறுகளைச் செய்தார்கள், சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறினார்கள் என்று கண்டறிந்து அவர்கள் அந்த நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூற வேண்டும்.   விடுதலைப் புலிகளின் குற்றங்கள் புறக்கணிக்கப்படவில்லை.  கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உரையாற்றும் போது, விடுதலைப் புலிகளை மோசமான அமைப்பாக சுட்டிக்காடிவருவதுடன், அவர்கள் தோற்கடிக்கப்பட்டதற்காக யாரும் வருந்தக் கூடாது என்றும் குறிப்பிட்டு வருகிறேன். மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை நாம் வரவேற்கிறோம்.  

விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார

No comments:

Post a Comment