06 February 2014

இடம்பெயர்ந்த 93 குடும்பங்கள் மீள்குடியேற விருப்பம்

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பாவற்கொடிச்சேனை பிரதேசத்திலிருந்து  1987ஆம் ஆண்டு அசாதரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்து காத்தான்குடியில் தங்கியுள்ள 93  குடும்பங்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற விரும்பியுள்ளதாக உன்னிச்சை முஸ்லிம் மீள்குடியேற்ற சங்கத் தலைவர் எம்.ஏ.கபூர் தெரிவித்துள்ளார். 

அவர் இது குறித்து தெரிவிக்கையில் மக்களை மீள்குடியேற்றும் ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றக் கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட கபூர் மேற்படி 105 குடும்பங்கள் இடம்பெயர்ந்து காத்தான்குடியில் தங்கியிரு;ந்தாகவும் அவற்றில் 12 குடும்பங்கள் 2011ஆம் ஆண்டு டிசம்பரில்  உன்னிச்சை பாவற்கொடிச்சேனை பிரதேசத்தில் மீள்குடியேறியதாகவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment