ஐநா மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக முந்தைய இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்த அமெரிக்கா எதிர்பார்த்தபடி இப்போது ஒரு தீர்க்க முடியாத பிரச்சினையில் சிக்கியுள்ளது என்பது அதிகளவு தெளிவாகத் தெரிகிறது. இதன் கருத்து ஸ்ரீலங்கா பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது என்பதல்ல. மாறாக இன்னும் அதிகமானவை வரும் ஆண்டுகளில ஐநா மனித உரிமைகள் சபையில் இதைப் பின் தொடரவும் மற்றும் தொடர்ந்து வரக்கூடியதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் ஐநா மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே பெரியளவு சம்மதத்தை பெற்றுள்ள வரைபு தீர்மானத்தை மேற்கு கொண்டு வரக்கூடும் என்று தொடர்ந்து நிலையான ஒரு அச்சம் எழுந்துள்ளது. இங்கு இந்தியாவிலும் திரும்பவும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்புகள் எழலாம்.
ஸ்ரீலங்காவின் கண்ணோட்டத்தில் புதிய ஐநா மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கையை ஒரு சிறிய அளவிலாவது சேர்த்துக் கொண்டால் அது போதுமானது. நடுநிலை வகிப்பவர்கள் இருந்தால்கூட நல்லதுதான். அவர்களது தீர்மானத்துக்கு ஒரு சிறிய அல்லது மட்டுமட்டான பெரும்பான்மையுடன் கூடிய வெற்றி, அதைக் கொண்டுவருபவர்கள் கூறும் காரணங்களுக்கு (அப்படி ஏதாவது இருந்தால்) போதுமானதாக இருக்காது, மற்றும் புதிய தீர்மானத்திற்கு பின்னால் இருப்பவர்களின் கூட்டான கௌரவத்தின் தோற்றத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது ஸ்ரீலங்கா அதிலிருந்து விடுதலை பெற முடிந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் உள்நாட்டுப் பிரச்சினையோ அல்லது சர்வதேசப் பிரச்சினையோ ஏற்பட்டால், ஏனைய சிறிய நாடுகளிடம் ஸ்ரீலங்காவின் சொல்லுக்கு ஆதரவு கிட்டும்.
இதை அச்சுறுத்தல் அல்லது எச்சரிக்கை என்று எப்படி அழைத்தாலும் சரி ஐநா மனித உரிமைகள் சபை தீர்மானம் - 3 ன் தயாரிப்பை மேற்கொள்ளும் அமெரிக்கா அது ஒரு வெறுமே குரைக்கிற ஆனால் கடிக்காத - அதனால் கடிக்க முடியாத - ஒரு தீர்மானமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அதாவது ஐநா மனித உரிமைகள் சபையில் உள்ள எத்தனை அங்கத்தவர்கள் அதனை விரும்புகிறார்கள், மற்றும் ஒரு உயர் அதிகாரம் மிக்க நாட்டின் முயற்சியை அவர்கள் பின்தாங்க வேண்டுமே தவிர ஒரு எதிரான வாக்களிப்பதாகவோ அல்லது நடுநிலை வகிப்பதாகவோ இருக்கக்கூடாது, அல்லது அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும்; என்பதில் அமெரிக்கா கவனமாக உள்ளது.
அந்த வரைபின் வார்த்தைகளை எவ்விதம் அமைப்பது, மற்றும் ஏனைய வாக்களிக்கும் அங்கத்தவர்களுடன் எப்போ மற்றும் எங்கே அதற்கு ஒத்துழைப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்துவது என்கிற கேள்விதான் தற்போது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய மேற்கு நாடுகளின் மனங்களில் பிரதானமாக இடம்பிடித்து உள்ளது. அவர்களால் காத்திருக்க முடியும், ஆனால் ஸ்ரீலங்காவால் அப்படியிருக்க முடியாது. ஐநா மனித உரிமைகள் சபையில் அடுத்ததாக இடம்பெறவுள்ள எந்த ஒரு முயற்சியும் மற்றும் அதன் தலைவர் நவி பிள்ளையின் கடந்த வருட ஸ்ரீலங்கா விஜயத்தின் பின் அவர் சமர்பிக்க விருக்கும் விரிவான அறிக்கை உட்பட, அனைவரது கவனத்தையும் இழுக்கக் கூடியதாக உள்ளன, இப்போதில்லா விட்டாலும் பின்னர் ஐநா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் தடைகள் என்பனவற்றுக்கு நெருக்கமாக ஒரு அடி முன்னோக்கி வைப்பதற்கு அவை துணை செய்யும்.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்பன குறைந்தது இப்போதைக்காவது நிறுத்த முடியும் என்பதை இது விளக்கக் கூடும். ஆனால் ஐநா மனித உரிமைகள் சபையில் அங்கத்தவர்களாக உள்ள மூன்றாம் உலக நாடுகள் அதைக் சகிப்பார்களா என்பது ஒரு கேள்வியாக எஞ்சி நிற்கிறது. எந்த நேரத்திலும் அவர்கள் ஐநா மனித உரிமைகள் சபையில் தனியான ஒரு பெரிய குழுவாக உள்ளார்கள், மற்றும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஒரு பிரேரணைக்கு சாதகமாக அவர்களை ஒற்றுமைப்படுத்தி வைத்திருப்பதற்கு ஒன்றில் அழுத்தங்களைப் பிரயோகித்தோ அல்லது பணபலத்தை பயன்படுத்தியோ முடியுமா என்பது தொடர்ந்தும் ஒரு மில்லியன் டொலர் கேள்வியாக இருந்து வருகிறது. அல்லது தாங்கள் எதிர்பார்க்கும் இறுதி முடிவு தங்களுக்கு திருப்திகரமாக இல்லாமலிருந்தால் மேற்கு இந்த தீhமானத்தை அடுத்த ஐநா மனித உரிமைகள் சபையில் கொண்டு வர எண்ணினால் மேற்குறித்த இரண்டு முயற்சிகளும் எவ்வளவு தூரத்துக்கு நீடிக்க முடியும்.
மேற்கின் இக்கட்டான நிலையை காரணம்காட்டி ஸ்ரீலங்கா நிரந்தரமாக சிக்கலில் இருந்து தப்பி விட்டதாக அர்த்தம் கற்பிக்க முடியாது. மாறாக அது சுட்டிக்காட்டுவது இந்த வேதனையான நடவடிக்கை சற்றே தாமதமாக நடக்கிறது, ஆனால் பிரச்pனையை தீர்க்கும் முடிவான விளையாட்டு எப்போது என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியாது. கடந்த காலத்தில் மேறகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைப் பார்க்கும்போது அது மற்றும் ஒரு விளையாட்டுக்காக காத்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. ஐநா மனித உரிமைகள் சபையில் உள்ள வேதனை தருபவர்கள் அது காத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஸ்ரீலங்காவுக்கோ மற்றும் அதன் மக்களுக்கோ இது ஒருமுறை மட்டும் நடக்கும் ஒரு சம்பவமில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அது நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தக்கூடிய சக்தியையும் மற்றும் நேரத்தையும் வீணாக விரயமாக்கி வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்காவின் தலைமைத்துவம,; ஒரு காலத்தில் காலனித்துவ வாதிகளாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் நவீன காலனித்துவத்தை கைப்பற்றி இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு எதிரான தேசிய உணர்வுகளை தூண்டிவிடக் கூடியதாக உள்ளது. ஈழப்போர் - 4ல் பெற்ற வெற்றி வருடங்கள் பல கடந்த பிறகும், தற்பொழுது ஆட்சியில் உள்ள கூட்டணியான ஸ்ரீ.ல.சு.க - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மாகாணங்களுக்குப் பின் மாகாணங்களில், தேர்தலுக்கு மேல் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கும் துணையாக உள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான குறைவான காலத் தவணையான நான்கு வருடங்கள் நவம்பர் 2014ல் முடிவடைவதால், இரண்டு வருடங்கள் முன்னதாக எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த தலைமைத்துவம் காத்திருக்கிறது.
அவருக்கு இணையானவர்கள் அதிக தூரம் செல்ல முடியாததால், இந்த வழியில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ போருக்கு பின்னான நாட்டு மக்களின் (சிங்களவர்கள்) மனங்களை 2010ல் முன்கூட்டியே நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கவர்ந்து வெற்றி பெற்றார். அடுத்ததாக உள்ள கேள்வி 2015ல் நடக்கவேண்டிய பாராளுமன்றத் தேர்தல்களும் முன்கூட்டியே நடத்தப்படுமா என்பதுதான். சர்வதேச சமூகம் சுமத்தும் பழி, உள் நாட்டிலுள்ள சிங்கள சமூகத்தினரின் மனங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது, ஐநா மனித உரிமைகள் சபையில் அங்குள்ளவர்களின் விருப்பங்கள் துல்லியமாக முன்னெடுக்கப்படும்போது, இதன் மாறுதலையும் இப்போதோ அல்லது பின்னரோ உண்மையாகலாம்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் நடத்தும் ராஜதந்திரப் போரில் தோற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், பெரும்பான்மை சிங்களவர்களின் மனங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளுக்கு எதிராக உள்நாட்டில் மிக மோசமாகத் தூண்டிவிட இயலும். தமிழர்கள் இதன் இடையில் மாட்டிக் கொள்வார்கள். பொறுப்புக் கூறல் விடயத்தில் தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப் படவில்லை. அல்லது இதற்கிடையில் தமிழர்கள் அதை விட்டுக் கொடுப்பது போலவும் தெரியவில்லை - அல்லது அவர்களிடம் அப்படிச் செய்யும் பழக்கம் இல்லையா எனக் கேட்கவும் தேன்றுகிறது.
இந்த நிலையில் எப்படி முன்னோக்கிச் செல்வது என்பது, ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்கள் மற்றும் குறிப்பாக புலம்பெயர் சமூகத்திலுள்ள அவர்களின் சகோதரர்கள் ஆகியோர் மத்தியில் உள்ள மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. இந்தவேளையில் அங்கு ஏற்பட்டுள்ள அவர்கள் முன்பு அறிந்திராத வகையான தாமதங்கள் அவர்களை மிருதுவாக்கி, நாட்டில் அந்த நேரம் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திறகுத் துணையாக நின்று அரசியல் நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்க உதவுமா? இதுவும் மீண்டும் பதில் தேவையான ஒரு கேள்வி, வெகு விரைவிலேயே தங்களிடமே அந்தக் கேள்விகளை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிந்திய பாலுக்காக அழுவது
மிதவாதிகளோ அல்லது போராளிகளோ, அன்றில் எல்.ரீ.ரீ.ஈ யோ அல்லது மற்றவர்களோ தொடர்ந்து வரும் தமிழ் தலைமைகள் இன்னல்களை நேரத்துக்கு ஏற்றபடி வாய்ப்பாக மாற்றிக் கொள்வதில் அளவுக்கு மீறிய சாமர்த்தியம் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். சிங்கள தேசியவாதிகளால் கடந்த காலங்களில் சகித்துக் கொள்ள முடியாத நிலை இருந்தபோதும,; ஒரு சமூகமாக மேலெழுவதற்கு தமிழர்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்துள்ளார்கள் என்பது மிகப் பெரிய உண்மை. இது மிதவாதிகள் மற்றும் போராளிகள் ஆகிய இருதரப்பினராலும் அவர்கள் காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் இராணுவம் ஆகிய இரண்டு முன்னரங்குகளிலும் எல்.ரீ.ரீ.ஈ அத்தகைய திறமைகளை தனது தலைமைத்துவம் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் வெளிக்காட்டியுள்ளது.
அதற்கு முன்பு தமிழர்கள் மிதவாத தலைமையை கொண்டிருந்த பொழுது இதே வேலையை அவர்கள் அரசியல் ரீதியாக செய்தார்கள், ஆனால் போர்க்குணம் விரும்பத்தக்க ஒன்றாக மாறியபின் ,புதிய தலைமுறை இளைஞர்கள் போதியளவு துன்பத்தை அனுபவித்து விட்டார்கள். இதில் தெரிந்து கொள்ளவேண்டிய சுவராஸ்யமான ஒரு விடயம் என்னவென்றால், தனி நாட்டுக்கான வட்டுக்கோட்டை தீர்மானம் கூட, தமிழ் போர்க்குணத்தின் வெளிப்படையான முன்னேற்றத்தை ஒடுக்கி தமிழர்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை தாராண்மையான அதிகம் அரசியல் வழிகளில் உள்ளடக்குவதுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை. கடந்த காலத்திலும் மற்றும் யுத்தத்துக்குப் பின்னும் மிதவாத தமிழ் தலைமைகள் கூட இதே விடயத்தினூடாக கிட்டத்தட்ட அதே வழியில்தான் போயிருக்கிறார்கள் - ஆனால் மிதவாதிகள் தோற்றால் அந்த இடத்தை கைப்பற்றத் தயாராக இருக்கும் இளமையான போராளிகள் அந்த சுற்றாடலில் இல்லை. இப்போதுள்ள போராளிகள் அல்லாத புலம் பெயர்ந்தவர்கள், பழங்கால போராளிகளுக்கு ஒரு மாற்றீடா?
கடும்போக்கு தமிழ் தேசியவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் சிந்திய பாலுக்காக ஒரு நாடகம் போடுகிறார்கள் - ஆனால் அதற்கான பழியை எப்போதும் மறு பக்கத்தினரையே ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை அவர்களல் இப்போதே - பின்னர் அல்ல - தாங்கள் சர்வதேச சமூகத்தையே நம்பியதாகவும் அவர்கள்கூட தங்களை (மீண்டும் ஒருமுறை) ஏமாற்றி விட்டதாக சொல்ல முடியும். அதன்பின் அவர்கள் உள்நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர் மீது போருக்குப் பிந்தைய விரோத உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்;கள் மீது திரும்பவும் வெறுப்புக் கொள்ள வைப்பதை ஆரம்பிப்பார்கள்.
இதில் கேள்வி என்னவென்றால், ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் சமூகம் மற்றும் அரசியல்வாதிகள் உடபுறமாகத் திரும்பி கடந்த காலத்தில் மிதவாத அல்லது போராளித் தலைமைகளிடம் கேட்பதை தவிர்த்த சில பொருத்தமான கேள்விகளை தற்பொழுது தன்னிடமே கேட்கவேண்டும். அந்தக் கேள்விகள் தற்போதுள்ள விவகாரங்களின் நிலைக்கு தமிழர்களின் சொந்தப் பங்களிப்பு மற்றும் குறைபாடுகள இருந்தாலும் கூட உள்நாட்டுப் பொறிமுறைகளைக் காட்டிலும் வெளியாட்கள்மீது அதிக நம்பிக்கை வைப்பது போன்றவற்றுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்திடம் அவர்கள் கேட்டவற்றை பெற்றுத் தருவதில் சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது, இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு நடக்கப் போவது என்ன, போன்றவற்றில் தமிழர்கள் பெற்றுள்ள அனுபவத்துடன் அந்தக் கேள்விகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்திடம் அவர்கள் பெற விரும்பியதை பெற முடியாவிட்டால், அவர்கள் திரும்பவும் அதைப்பற்றியே இன்னமும் முறைப்பாடு செய்யப் போகிறார்களா அல்லது தற்கால யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு தங்கள் சொந்த நிலைப்பாடு மற்றும் சூழ்நிலை என்பனவற்றை மீளாய்வு செய்யப் போகிறார்களா.
நம்புவது அநியாயம்
கடந்த காலங்களில் தமிழ் தலைமை, திரும்பவும் மிதவாதி அல்லது போராளி, தாங்கள் நம்பிக்கை வைத்த மற்றவர்கள், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழர்களை நம்பச் செய்திருந்தார்கள, பெரும்பாலும் போராளிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினைப் பற்றி இவ்வாறான நம்பிக்கையை உண்டாக்கியிருந்தார்கள். அத்தகைய ஒவ்வொரு துரோகமும் தமிழர்களை குறிப்பாக தமிழ் தேசியவாத சிந்தனையாளர்களை, தனது சமூகம் தங்களது உரிமைகளுக்காக போராடுகிறது மற்றும் அவர்களுக்கான ஒரே பதில் தனிநாடு என்கிற இலட்சியம்தான் என்று சம்மதிக்கும்படி செய்திருந்தது. தற்போதைய போக்கும் தவிர்க்க முடியாத ஒன்றினை நோக்கி, அவர்களில் சிலர் எதிர்பார்த்த ஒன்றினை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறது, அவர்கள் மத்தியிலுள்ள இன்னும் சிலர் அந்த வழியில் செல்வதையே விரும்புகிறார்கள் - தங்களை இணங்க வைப்பது மட்டுமன்றி மீதமுள்ள தமிழர்களிடமும் அவர்கள் திரும்பவும் போராடாமல் இருப்பதற்கு சிறிய தெரிவுகளே உள்ளன என்று நம்ப வைக்கிறார்கள்.
அப்படியானால் ஸ்ரீலங்கா அரசாங்கம் மட்டும்தானா அதற்கான இலக்கு, இப்போது அரசியல் ரீதியாக உள்ளது போல அல்லது; சர்வதேச சமூகம் அடையாளப் படுத்த நேரம் பார்த்து காத்திருக்கும் ஸ்ரீலங்காவுடன் கூட்டு சேர்ந்தவர்களும் இதில் அகப்படுவார்களா( அவர்கள் அப்படி ஏதாவது செய்வதை காண நேர்ந்தால் அது தனி நாட்டுக்கான அங்குலம் அளவு முனனேற்றமாக இருக்காது.) அல்லது ஐநா மனித உரிமைகள் சபையிலும் ஏனைய இடங்களிலுமுள்ள இடைக்கால முட்டுக்கட்டை, உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் உள்ள தமிழர்களுக்கு தங்களது பழைய மற்றும் மறக்க முடியாத வழிகளை நோக்கி முன்னேறுவதை நியாயப் படுத்துவதற்கு ஏற்ற காரணமாக தோன்றுகிறதா, அதனால் சர்வதேச சமூகம் குற்ற உணர்ச்சி அடைந்து தங்களின் வழிமுறை சரியானது ஏற்றுக் கொள்ள வைப்பதற்காகவா?
அல்லது இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு வேறு ஏதாவது வழி உள்ளதா - மற்றும் அப்படி இருக்குமானால், அவர்கள் தொடர்ந்து மாற்றிவரும் தங்கள் அணுகுமுறையை பற்றி தம்மிடமோ, தமிழர்களிடமோ மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமோ நியாயப்படுத்த முடியுமா? அது தான் விடயமானால் சர்வதேச சமூகம் மேற்கொண்டு முன்னேறுவதற்கு முன்னர் ஒரு கணம் நின்று நிலமைகளை பரிசீலிக்குமா? எல்லாவற்றையும் விட மேற்கொண்டு பெறுப்புக்கூறல் விடயங்களுக்கு அப்பால் செல்ல மற்றும் ஒட்டு மொத்தமாக இனப் பிரச்சினையை தீர்க்க அவர்களிடம் தெளிவான இலக்குகளோ அல்லது மூலோபாயமோ அவர்களிடம் இருப்பது போலத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் தனி நாட்டுக்கான சாத்தியத்தை மற்றும் அதற்கான தங்களது ஆசீர்வாதங்களையும் தங்கள் தெரிவின்போது கணக்கிலெடுக்கவில்லை.
பொறுப்புக் கூறல் விடயங்கள் சம்பந்தமாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையை கோரும் சமீபத்தைய வட மாகாணசபை தீர்மானம் அத்தகைய வாய்ப்புகளை பற்றி சூசகமாகத் தெரிவிக்கிறது. ஒன்றில் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின்மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் அதிகமானவற்றை விரைவாக எதிர்பர்க்கிறார்கள் என்பதற்கான அழுத்தத்தை தெரிவிக்கும் திட்டத்pன் ஒரு பகுதியாக அது இருக்க வேண்டும்.
அது எப்படியிருந்தாலும், இனப் படுகொலைக்கு ஒப்பான என மாற்றப்பட்ட புதிய தீர்மானம் (ரி.என்.ஏ முதலமைச்சரான நீதியரசர். சி.வி விக்னேஸ்வரன் அவர்களால் அந்த நேரம் மாற்றப்பட்டது) பிரச்சினையை விரியத் திறந்து வைத்துள்ளது - அது ஸ்ரீலங்கா அரசாங்கம், தலைமைத்துவம் மற்றும் இராணுவம் என்பனவற்றை மட்டும் இலக்குயு வைத்துள்ளதா அல்லது எல்.ரீ.ரீ.ஈ யினையும் சேர்த்துள்ளதா, அல்லது தீhமானத்தை பிரதானமாக எழுப்பியவர்கள் அதில் அதிகம் ஈடுபாடு கொண்டதால், அதை வரைபு செய்யும்போது ஸ்ரீலங்கா அதிகாரிகளை மட்டும் மனதில் வைத்து செயலாற்றியதால் அதில் உள்ள சொற்குழப்பத்தை கவனிக்கத் தவறிவிட்டார்களா?
(இந்த எழுத்தாளர் ஒப்சேவர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சென்னைக் கிளையிலுள்ள ஒரு மூத்த ஆராய்ச்சியாளர்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments:
Post a Comment