21 February 2014

இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையின் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முன்வந்தமை தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனது அறிக்கையில் ராஜீவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நாட்டின், உயரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய, ராஜீவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு முன்வந்துள்ள செயல், நீதியின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கும் ஏற்றதல்ல. 

ராஜீவ் படுகொலை, இந்த தேசத்தின் ஆன்மா மீதான தாக்குதல்.  இந்தியாவின் போற்றுதலுக்குரிய தலைவரையும், அப்பாவி மக்களையும் கொன்றவர்களை விடுவிப்பது நீதி கோட்பாடுக்கு எதிராக அமையும். இந்த விஷயத்தில் எந்த அரசும், கட்சியும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மென்மையாக நடந்து கொள்வது ஏற்புடையது ஆகாது எனவே, ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது என்ற, தமிழக அரசின் முடிவு ஏற்புடையது அல்ல. அந்த நடவடிக்கையில், சட்டத்தின் நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. எனவே, ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளோம் என்றார்

இது குறித்து மத்திய சட்ட அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியமானவருமான கபில்சிபில் மத்திய சட்ட அமைச்சரும், காங்., கட்சியைச் சேர்ந்தவருமான, கபில் சிபல் கூறியதாவது: ராஜிவ் கொல்லப்பட்ட சம்பவம், தனியொரு மனிதன் மீதான தாக்குதல் அல்ல இந்திய குடியரசு மீதான தாக்குதல். இந்த விஷயத்தில், பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறும் பா.ஜ.க தமிழக அரசின் செயலை ஏன் கண்டிக்கவில்லை? பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இதுபற்றி எதுவும் கூறவில்லை. இது, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும். தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் கட்சிகள், இத்தகைய இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கக் கூடாது என்றார் 

காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யும், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான, ராஜிவ் சுக்லா, தமிழக அரசின் நடவடிக்கையில், அரசியல் நோக்கம் உள்ளது. இந்நிலையில், பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்த, சுப்பிரமணியசுவாமி,  தமிழக முதல்வர் ஜெயலலிதா, சினிமா நடிகை. அவருக்கு, சட்டத்தை பற்றி ஒன்றும் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அவர், தடாலடியாக முடிவை அறிவித்து உள்ளார். ஜெயலலிதா இனிமேலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்க விடாமல், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,என்றார்

No comments:

Post a Comment